தமிழக மீனவர்கள் தொடர் கைது: தீர்வுகாண அமைச்சர் ஸ்ரீநாத் தில்லி பயணம்
தமிழக மீனவர்கள் கைது குறித்து மத்திய அமைச்சர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக அமைச்சர் ஸ்ரீநாத் கூறியது பற்றி...
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுப்பது குறித்து மத்திய அமைச்சர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக அமைச்சர் ஸ்ரீநாத் கூறியுள்ளார்.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநில அரசும், மத்திய அரசும் தீர்வுகாண வேண்டும் என மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும், மீனவர்கள் கைது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
இதுகுறித்து மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத்-திடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பிய நிலையில், அவர் பதிலளித்துப் பேசியதாவது, "மீனவர்கள் கைது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இதுகுறித்து முதல்வரிடமும் நான் பேசியுள்ளேன்.
Advertisement
Advertisement
இந்த விவகாரம் தொடர்பாக செவ்வாய்க்கிழமையில் (ஆக. 18) என்னை தில்லிக்கு செல்லுமாறு கூறியுள்ளனர். தில்லியில் மத்திய வெளியுறவுத் துறை மற்றும் மீன்வளத் துறை அமைச்சர்களைச் சந்தித்துப் பேசவுள்ளேன். இந்தப் பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
Arrests of Tamil Nadu fishermen: Minister Srinath travels to Delhi to meet Union Ministers
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.