மஞ்ஞுமெல் பாய்ஸ் பட நடிகர் ஸ்ரீநாத் பாஸியின் புதிய திரைப்படம்!
மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாஸியின் புதிய படத்தின் போஸ்டர் குறித்து...
மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாஸி (38 வயது) நடிப்பில் உருவாகும் ‘பிரியத்தமன்’ என்ற படத்தின் தலைப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது.
ஆர்ஜே, விஜேவாக தொடங்கிய நடிகர் ஸ்ரீநாத் பாஸி 2011ல் மோகன்லால் படத்தில் அறிமுகமாகி தற்போது முக்கிய கதாநாயகனாக மாறியுள்ளார்.
ஸ்ரீநாத் பாஸியின் கும்பலாங்கி நைட்ஸ், வைரஸ், கப்பேலா, ஹோம் ஆகிய படங்கள் மிகவும் வரவேற்பைப் பெற்றன. மஞ்ஞுமெல் பாய்ஸ் படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
Advertisement
Advertisement
கடைசியாக இவரது நடிப்பில் கரகம் என்ற படம் கடந்த மே மாதத்தில் வெளியானது. தற்போது மூன்று படங்களில் நடித்து வருகிறார்.
கஞ்சா மற்றும் போதைப் பழக்க வழக்குகளில் அடிக்கடி இவரது பெயர் அடிப்பட்டு சர்ச்சையிலும் சிக்கினார். இந்த நிலையில், ஷ்ரேயா நிதி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் பிரியதமன் என்ற படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.
கிருஷ்ணா பூஜப்பூரா எழுதிய இந்தப் படத்தை ரெஜி பிரபாகரன் இயக்கியுள்ளார். நாயகியாக தேஜ லஷ்மி நடித்துள்ளார். விரைவில் புதிய அப்டேட்டுகளை வெளியிட்டுள்ளார்.
Priyadaman: Srinath Bhasi's new film title poster announced!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.