மருத்துவம்

13% புற்றுநோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கும் உடல் கொழுப்பு!

DIN

உங்கள் அழகான உடல் தோற்றத்தை கெடுக்கும் தொப்பையால் அவதிப்படுபவரா நீங்கள்? அழகிற்காக இல்லாவிட்டாலும் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்காக வயிற்று கொழுப்பை நீங்கள் குறைக்கத்தான் வேண்டும்.

அதிகமான உடல் எடையுடன் கூடிய தொப்பையானது மார்பகம், குடல், உணவுக் குழாய், சிறுநீரகம், கல்லீரல், மேல் வயிறு, பித்தப்பை, கருப்பை மற்றும் தைராய்டு உள்ளிட்ட புற்றுநோய்கள் வருவதற்கான வாய்ப்பை 13% அதிகரிக்கிறது.

இடுப்பு பகுதியில் அதிகரிக்கும் சுமார் 8 செ.மீ கொழுப்பு, 15% குடல் புற்றுநோய் ஏற்படக் காரணமாகிறது.

அதிகப்படியான உடல் கொழுப்பு பாலின வேறுபாட்டுக்குக் காரணமாயுள்ள ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டிரோனின் அளவை மாற்றுவதுடன், உடலின் இன்சுலின் சுரக்கும் அளவை அதிகரித்து உடல் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த அறிகுறிகள் அனைத்தும் புற்றுநோயுடன் தொடர்புடையவை என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்குகின்றனர்.

புகைபிடிப்பதால் எந்த அளவு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புள்ளதோ அதே அளவு வாய்ப்பு அதிக உடல் எடையிலும் உள்ளது.

உடல் கொழுப்பில் உள்ள செல்கள் ஹார்மோன்கள் மற்றும் புரதச்சத்துக்களை தயார் செய்து அவற்றை இரத்த ஓட்டத்தில் கலந்து உடல் முழுவதும் பரவச்செய்கிறது. இந்த ரசாயனம் உடலின் பல பகுதிகளைப் பாதிக்கும் திறன் மிக்கது. கொழுப்பானது உடலின் திசுக்களில் உள்ள நோயெதிர்ப்பு உயிரணுக்களை ஈர்க்கின்றது, இந்த உயிரணுக்கள் வெளியிடும் இரசாயனங்கள் உடல் வீக்கத்தை அதிகரித்து புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்தை அதிகரிக்கக்கூடியது. 

தொப்பையைக் குறைக்க கூடிய உணவு வகைகள்:

  • ஆப்பிள்

  • வெள்ளரிக்காய்

  • கீரை வகைகள்

  • பீன்ஸ்

  • தர்பூசணி

  • பாதாம்

சில எளிய வழிகள்:

  • குளிர்பானங்களை குடிப்பதைத் தவிர்க்கவும்

  • புரதச்சத்து நிறைந்த உணவை உண்ண வேண்டும்

  • நண்டு சாப்பிடக் கூடாது

  • நார்ச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிடவும்

  • முறையான உடற்பயிற்சி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT