விஷக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனே நிவாரணமளிக்கும் அற்புத கசாயம் இது. பயன்படுத்தி பலனடையுங்கள்.
தேவையான பொருட்கள்
சுக்கு - 5 கிராம்
வேப்பிலை - ஒரு கைப்பிடி
மிளகு - 5 கிராம்
பூண்டு - 5 பல்
மஞ்சள் தூள் - இரண்டு சிட்டிகை
செய்முறை
முதலில் சுக்குவை தோல் நீக்கி கொள்ளவும். தோல் நீக்கிய சுக்கு , மிளகு மற்றும் பூண்டை தட்டிக் கொள்ளவும். வேப்பிலையை நன்கு அலசி சுத்தப்படுத்திக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 500 மி.லி தண்ணீர் ஊற்றி அதில் தட்டி வைத்துள் சுக்கு , வேப்பிலை, மிளகு, பூண்டு மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்து அதனை 150 மி.லி அளவாகச் சுண்டச் செய்து இறக்கி வைத்து வடிக்கட்டிக் கொள்ளவும்.
பயன்கள்
இந்தக் கசாயம் விஷக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக அமையும். இந்தக் கசாயத்தை தயார் செய்து தினமும் காலை , மதியம் மற்றும் இரவு என மூன்று வேளையும் கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வந்தால் விஷக் காய்ச்சல் குணமாகும். தொடர்ந்து மூன்று நாட்கள் குடித்து வரவும்.
இரவு படுக்கப் போகும் முன்
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு
அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
- கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் காய்கறி சிகிச்சையாளர்.
Cell : 96557 58609, 75503 24609
Covaibala15@gmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.