முகப்பு
மருத்துவம்

அதிக நாட்கள் நீடிக்கும் மாதவிலக்கு குறைபாட்டைச் சீர் செய்ய உதவும் கசாயம்

அதிக நாட்கள் நீடிக்கும் மாதவிலக்கு குறைபாட்டைச் சரிசெய்ய அருகம்புல் மாதுளை இலை கசாயத்தைக்

Updated On : 14 ஏப்ரல், 2020 at 2:05 PM
பகிர்:


அதிக நாட்கள் நீடிக்கும் மாதவிலக்கு குறைபாட்டைச் சரிசெய்ய அருகம்புல் மாதுளை இலை கசாயத்தைக் குடித்து பலன் பெறுங்கள். 

தேவையான பொருட்கள்

அருகம் புல்.     -   ஒரு கைப்பிடி

Advertisement

மாதுளை இலைந் தளிர்      - ஒரு கைப்பிடி

மஞ்சள் தூள்    - 2 சிட்டிகை
                                          
செய்முறை

முதலில் அருகம் புல் மற்றும் மாதுளை இளந்தளிர்களை பறித்து கழுவி சுத்தப்படுத்திக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 500 மி.லி அளவு தண்ணீர் ஊற்றி அதில் அருகம் புல் , மாதுளை இளந்தளிர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். நன்றாக கொதிக்க வைத்து  150 மி.லி அளவாக சுண்ட வைத்து கசாயமாக்கி  இறக்கி வடிகட்டி  குடிக்கவும்

பயன்கள்

இந்தக் கசாயம் அதிக நாட்கள் நீடித்த மாதவிலக்கு குறைபாட்டிற்கு அருமருந்தாகும். இந்த கசாயத்தை தயார் செய்து காலை மாலை என இருவேளையும் தலா 75 மி.லி அளவாக   குடித்து வரவும். மூன்று முதல் ஐந்து நாட்கள் குடித்து வந்தால் அதிக நாட்கள் நீடித்த மாதவிலக்கு குறைபாடு நீங்கும்.

இரவு படுக்கப்போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

KOVAI  HERBAL  CARE 
VEGETABLES CLINIC

- கோவை பாலா 

இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.

Cell: 96557 58609, 75503 24609

Covaibala15@gmail.com  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.