மருத்துவம்

தடைபட்ட மாதவிலக்கை தகர்த்தெறியும் அருமருந்து

இந்த சூரணம் தடைபட்ட மாதவிலக்கை தகர்த்தெறிய உதவும் அருமருந்தாகும்.

கோவை பாலா

தேவையான பொருட்கள்

வெங்காயத் தாள் சாறு   -  250 மி.லி

கருஞ்சீரகம்.                     -   100 கிராம்

கருப்பு எள்.                       -     100 கிராம்

செய்முறை

முதலில் வெங்காயத் தாளை எடுத்து சுத்தப்படுத்தி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய வெங்காயத்தாளை மிக்ஸியில் போட்டு அரைத்து மேற்கூறிய அளவு சாறு எடுத்துக் கொள்ளவும். கருஞ்சீரகம் மற்றும் கருப்பு எள்ளை சுத்தப்படுத்திக் கொள்ளவும் பின்பு அந்தசாறுடன் கருப்பு எள் மற்றும் கருஞ்சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கி அதனை நன்கு உலர வைக்கவும். நன்கு உலர்ந்தப் பின்பு அரைத்து பொடியாக்கிக் கொள்ளவும்.

பயன்கள்

இந்த சூரணம் தடைபட்ட மாதவிலக்கை தகர்த்தெறிய உதவும் அருமருந்தாகும். மேற்கூறிய சூரணத்தை தயார் செய்து மாதவிலக்கு வராத சமயங்களில் ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுத்து காலை மாலை என இரண்டு வேளையும் சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வரவும். தொடர்ந்து மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு குறைபாடு சீராகும்.

குறிப்பு

கர்ப்பிணி பெண்கள் சாப்பிடக் கூடாது.

மேற்கூறிய சூரணம் துணை உணவாக பயன்படக்கூடியது. நீங்கள் எடுத்துக் கொண்டியிருக்கிற மருந்துகளோடு இதனை துணை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும், வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

- கோவை பாலா,

இயற்கை வாழ்வியல் நலம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.

Cell: 96557 58609,75503 24609

Covaibala15@gmail.com 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT