முகப்பு
மருத்துவம்

காய்ச்சலைப் போக்க உதவும் அற்புத கசாயம்

தீராத காய்ச்சலால் அவதிப்படுபவர்கள் புளியாரைக் கீரை மிளகு கசாயம் வைத்துக் குடியுங்கள். காய்ச்சல் பறந்தோடிப் போகும். 

Updated On : 13 மார்ச், 2020 at 5:53 PM
பகிர்:

தீராத காய்ச்சலால் அவதிப்படுபவர்கள் புளியாரைக் கீரை மிளகு கசாயம் வைத்துக் குடியுங்கள். காய்ச்சல் பறந்தோடிப் போகும். 

தேவையான பொருட்கள்

புளியாரைக்  கீரை   -  ஒரு கைப்பிடி

Advertisement

மிளகு                            -   10 கிராம்

மஞ்சள் தூள்               -  சிறிதளவு

செய்முறை

முதலில்  புளியாரைக் கீரையை  நன்றாக சுத்தப் படுத்தி ஆய்ந்து எடுத்துக் கொள்ளவும். மிளகைத் தட்டி தூளாக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் 500 மி.லி தண்ணீர் ஊற்றி அதில் ஆய்ந்து வைத்துள்ள புளியாரைக் கீரை , மிளகுத் தூள் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக்  கொதிக்க வைக்கவும்.

நன்கு கொதித்து அதனை 150 மி.லி அளவாகச் சுண்டச் செய்து  இறக்கி வைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

பயன்கள்

இந்தக் கசாயம் அனைத்து விதமான காய்ச்சல்களுக்கும் அருமருந்தாக  உதவும். காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் காலை, மதியம் மற்றும் மாலை என மூன்று வேளையும் இந்தக் கசாயத்தை தயார் செய்து வெறும் வயிற்றில் கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வரவும்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும்

வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

- கோவை பாலா 

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.

Cell  :  96557 58609   ,  75503 24609
Covaibala15@gmail.com  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.