மருத்துவம்

இதயம் சார்ந்த குறைபாடுகளைப் போக்க உதவும் கசாயம்

கோவை பாலா

இருதயம் சார்ந்த குறைபாடு உள்ளவர்கள் ஆரைக் கீரை தாமரைப் பூ கசாயத்தை குடித்துவர விரைவில் குணமாகும். 

தேவையான பொருட்கள்

ஆரைக்  கீரை     -  ஒரு கைப்பிடி

தாமரைப் பூ.       -  இரண்டு

ஏலக்காய்.           -   4

மஞ்சள் தூள்      -  2 சிட்டிகை

செய்முறை

முதலில் ஆரைக் கீரை மற்றும் தாமரைப் பூ ஆகியவற்றை  நன்றாக சுத்தப் படுத்தி ஆய்ந்து எடுத்துக் கொள்ளவும். ஏலக்காயைத் தட்டி தூளாக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் 500 மி.லி தண்ணீர் ஊற்றி அதில் ஆய்ந்து வைத்துள்ள ஆரைக் கீரை , தாமரைப் பூ , ஏலக்காய்த் தூள் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக  கொதிக்க வைக்கவும்.

நன்கு கொதித்து அதனை 150 மி.லி அளவாகச் சுண்டச் செய்து  இறக்கி வைத்து வடிக்கட்டிக் கொள்ளவும்.

பயன்கள்

இந்தக் கசாயம் இருதயம் சார்ந்த குறைபாடு உள்ளவர்களுக்கு அருமருந்தாகும். இந்தக் கசாயத்தை தினமும் காலை  வேளையில் வெறும் வயிற்றில் கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வரவும்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

- கோவை பாலா 

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.

Cell  :  96557 58609   ,  75503 24609
Covaibala15@gmail.com  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 கிரிக்கெட்டில் துரத்திப் பிடிக்கப்பட்ட அதிகபட்ச இலக்குகள்!

தமிழ்நாட்டில் மே.1 வரை ’வெப்ப அலை’ எச்சரிக்கை

ஐபிஎல் வரலாற்றில் தில்லியின் அதிகபட்ச ரன்கள்: மும்பைக்கு 258 ரன்கள் இலக்கு!

விழுப்புரம், புதுச்சேரியிலிருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் ரயில்கள் பகுதியளவில் ரத்து

ராமம் ராகவம் படத்தின் டீசர்

SCROLL FOR NEXT