ரத்த அழுத்தம் 
மருத்துவம்

உயர் ரத்த அழுத்தத்தைச் சீராக்க உதவும் சூரணம்

உயர் ரத்த அழுத்தத்தைச் சீராக்க ஆரைக்கீரை சீரகச் சூரணத்தை பயன்படுத்தி பலன்பெறுங்கள். 

கோவை பாலா

உயர் ரத்த அழுத்தத்தைச் சீராக்க ஆரைக்கீரை சீரகச் சூரணத்தை பயன்படுத்தி பலன்பெறுங்கள். 

தேவையான பொருட்கள்

ஆரைக் கீரைச் சாறு    -  350 மி.லி

சீரகம்                -   150 கிராம்

செய்முறை

முதலில்  ஆரைக் கீரையை  ஆய்ந்து எடுத்து சுத்தப்படுத்திக் கொள்ளவும். சுத்தப்படுத்திய பின்பு அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து மேற்கூறிய அளவு சாறு எடுத்துக் கொள்ளவும். 

சீரகத்தைச் சுத்தப் படுத்திக் கொள்ளவும். அரைத்து எடுத்து வைத்துள்ள சாறுடன் சீரகத்தைச் சேர்த்து நன்கு ஊறவைக்கவும். நன்கு ஊறின பிறகு அதனை உலர வைக்கவும். உலர்ந்த பின்பு அதனை அரைத்துப் பொடியாக்கிக் கொள்ளவும்.

பயன்கள்

இந்த  சூரணம்  உயர் ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மருந்து எடுத்துக் கொண்டியிருப்பவர்களுக்கு உதவும் அருமருந்தாகும். மேற்கூறிய சூரணத்தைத் தயார் செய்து தினமும் காலை மற்றும் இரவு  என இருவேளையும் தலா இரண்டு கிராம் அளவுப் பொடியை சாப்பிட்ட பின்பு சுடுநீர் அல்லது தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் உயர் ரத்த அழுத்தம் சீராகும்.

மேற்கூறிய சூரணம்  துணை உணவாக பயன்படக்கூடியது. நீங்கள் எடுத்துக் கொண்டியிருக்கிற மருந்துகளோடு இதனைத் துணை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று விழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாகச் சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும், வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

- கோவை பாலா,

இயற்கை வாழ்வியல் நலம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.

Cell  :  96557 58609   ,  75503 24609
Covaibala15@gmail.com 

Kovai Bala YouTube channel :
https://www.youtube.com/channel/UC8OPbuqkQl4C63ITOCQ1apQ
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்

SCROLL FOR NEXT