முகப்பு
மருத்துவம்

உயர் ரத்த அழுத்தத்தைக் குணப்படுத்த உதவும் அருமருந்து

உயர் ரத்த அழுத்தக் குறைபாடுகளால் துன்பப்படும்பொழுது இந்த சூரணத்தை தயார்செய்து தினமும் சாப்பிட்டு வரவும்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:21 PM
பகிர்:

தேவையான பொருள்கள்

வில்வ இலை (உலர்ந்தது)  - அரை கிலோ

சீரகம்                  -    50 கிராம்

செய்முறை

முதலில்  வில்வ இலையை தேவையான அளவுக்கு பறித்து (நன்கு முற்றின இலைகளை தவிர்த்து நடுத்தரமான இலைகள்) சுத்தப்படுத்தி மிதமான வெயிலில் உலர வைக்கவும். சீரகத்தை தேவையான அளவு எடுத்து சுத்தப்படுத்திக் கொள்ளவும். பின்பு இரண்டையும் ஒன்றாகக் கலந்து அரைத்து தூளாக்கிக் கொள்ளவும். தேவைப்பட்டால் சலித்து எடுத்துக் கொள்ளலாம்.

பயன்கள்

இந்த சூரணம் உயர் இரத்த அழுத்தத்தை  குணப்படுத்த உதவும் அருமருந்தாகும். மேற்கூறிய குறைபாடுகளால் துன்பப்படும்பொழுது இந்த சூரணத்தை தயார்செய்து  தினமும் அதிகாலை வேளை மற்றும்  இரவு உணவிற்கு முன்பு என இருவேளையும்  தலா ஐந்து கிராம் அளவு எடுத்து சுடுநீரில் கலந்து  சாப்பிட்டு வரவும்.

நீங்கள் எடுத்துக் கொண்டியிருக்கிற மருந்துகளோடு இதனை  எடுத்துக் கொள்ளலாம்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும். 

பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

-கோவை பாலா,

இயற்கை மருத்துவம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.
Cell  :  96557 58609   ,  75503 24609
Covaibala15@gmail.com 

Kovai Bala YouTube channel :
https://www.youtube.com/channel/UC8OPbuqkQl4C63ITOCQ1apQ

முழு கட்டுரையைப் படிக்க →