சிறுநீரகம் 
மருத்துவம்

சிறுநீரகங்களில் கற்களா? கரைக்க உதவும் உணவுகள்!

கிட்னி கல் பிரச்சினையால் அவதியுறும் மக்கள் கீழ்காணும் உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளலாம்

DIN

சிறுநீரகங்களில் கற்கள் உருவாகி அவதியுறும் மக்களுக்கு அந்த கற்களை கரைக்க உதவும் உணவுகள் சிலவற்றை அறிந்து கொள்ளலாம். முறையான மருத்துவ ஆலோசனையுடன் கீழ்காணும் உணவுகளையும் அதிகமாக எடுத்துக் கொண்டால் கிட்னி கல் எளிமையாக குணமாகிவிடும்.

பார்லி தண்ணீர்

பார்லி தண்ணீர் பருகுவதால் சிறுநீரகத்தில் உள்ள நச்சுகள் களையப்பட்டு அவை சிறுநீருடன் சேர்ந்து வெளியேறிவிடுகின்றன. மேலும், சிறுநீரக கற்களின் அடர்த்தியை கரைக்க இது உதவுகிறது. நாளடைவில், கற்கள் கரைந்து சிறுநீர் வழியாக வெளியேறவும் செய்யும்.

எலுமிச்சை சாறு

வீட்டில் எளிதாக செய்து பயன்படுத்தக் கூடிய எலுமிச்சை சாற்றில் உள்ள இயற்கையான சிட்ரேட்கள் சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்கின்றன. கற்களை உடைக்கும் திறனும் இதில் உள்ளது. இதனால் சிறுநீரக கற்கள் பிரச்சினைக்கு லெமன் ஜூஸ் குடிப்பது நல்லது.

கால்சியம் சத்து நிறைந்த உணவுகள்

கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை போதுமான அளவுக்கு எடுத்துக் கொண்டால் சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்கலாம். நாளொன்றுக்கு 1,000 முதல் 1,200 மில்லி கிராம் அளவு கால்சியம், உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

குடலில் உள்ள ஆக்ஸலேட் உடன் உணவிலுள்ள கால்சியம் சேர்ந்துவிடுவதால், சிறிதளவு கால்சியம் மட்டுமே சிறுநீரகத்தை சென்றடைகிறது. இதனால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் இருக்க, கால்சியம் நிறைந்த உணவுகள் முதன்மைத் தேர்வாக பரிந்துரைக்கப்படுகின்றன. சிறுநீரகத்தில் கற்கள் ஏற்கெனவே வளர்ந்திருந்தால் அவற்றை மேலும் வளராமல் தடுக்க கால்சியம் உதவி புரிகின்றது.

இந்த நிலையில், ஒன்றை கவனத்திற்கொள்வது அவசியம். செயற்கையாக கிடைக்கும் கால்சியம் உணவுகளைவிட இயற்கையான பொருள்களிலிருந்து கிடைக்கும் கால்சியம் உடலுக்கு நல்லது.

இளநீர்

இளநீர் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள ஓர் அருமருந்து. அதுமட்டுமல்லாமல், சிறுநீரகப் பாதையிலுள்ள கழிவுகளை நீக்கிவிடுவதால் மினரல்கள் படிவது தடுக்கப்படுகின்றது. இதனால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும் வாய்ப்பும் குறைகிறது.

மாதுளை

மாதுளை பழத்தில் ஆண்ட்டி-ஆக்ஸிடண்ட்ஸ் நிரம்பப் பெற்றுள்ளன. சிறுநீரக ஆரோக்கியத்துக்கு தேவையான ஏராளமான சத்துகளும் இந்த கனியில் உள்ளன.

இதிலுள்ள இயற்கை அமிலங்கள், சிறுநீரகத்தில் கற்கள் உருவாக காரணமாக விளங்கும் மினரல்கள் படிவதை குறைக்கின்றன. மேலும், இவை சிறுநீரகப் பாதையில் தேங்கியிருக்கும் நச்சுப் பொருள்களை வெளியேற்றிவிடுவதால் உடல் புத்துணர்ச்சி பெற உதவுகிறது.

இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்! தினசரி தேவையான அளவுக்கு தண்ணீர் பருகுவது ரொம்பவும் முக்கியம். தண்ணீர் குடிப்பதால் சிறுநீர் அதிகம் வெளியேறி கற்கள் உருவாகும் வாய்ப்பும் குறைகிறது. சிறுநீரக கற்கள் பிரச்சினையால் அவதிப்படுவோர் உப்பு குறைவாக எடுத்துக் கொள்வதும் அவசியம்.

தமிழகத்தில் 50 சதவீதம் பேருக்கு பருவநிலை மாற்றம் காரணமாகவே நாள்பட்ட சிறுநீரக நோய்களும், சிறுநீரக செயலிழப்பும் ஏற்படுவதாக மருத்துவத் துறையால் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அன்றாடம் மேற்கண்ட உணவுகளை எடுத்துக் கொண்டால் சிறுநீரகம் நலம் பேணப்படும்.

[பொறுப்புத் துறப்பு: இந்தச் செய்திகள் / தகவல்கள் மருத்துவ நூல்கள், இணைய தளங்கள், அனுபவப் பகிர்வுகள் அடிப்படையில் தொகுத்துத் தரப்படுகிற பொதுவான ஆலோசனைகள் மட்டுமே. எந்தவொன்றையும் செயல்படுத்தும் முன் உரிய மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவதே நல்லது. எந்த விதத்திலும் ‘தினமணி’ பொறுப்பாகாது.]

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிம்ம ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

சமயபுரம் கோயிலில் புதைவட மின் கம்பிகள் அமைக்கும் பணி தொடக்கம்

முசிறி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கு ரூ. 1. 20 லட்சம் மதிப்பில் பொருட்கள் வழங்கல்

மேலக்கல்லூரில் இருவரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 7 போ் கைது

பேங்க் ஆப் பரோடா சாா்பில் மாநகராட்சிக்கு பொக்லைன் இயந்திரம்

SCROLL FOR NEXT