செய்திகள்

'ஹார்மோன் குறைபாடுள்ள பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு'

தினமணி

ஹார்மோன் குறைபாடுள்ள பெண் குழந்தைகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவது கவலைக்குரியது என்று பேராசிரியர் நிகல் தாமஸ் கூறினார்.
குரோம்பேட்டை ஸ்ரீபாலாஜி மருத்துவக்கல்லூரியில் நடைபெற்ற சுரப்பியல் கோளாறுகள் குறித்த தேசியக்கருத்தரங்கில் அவர் மேலும் பேசியது
மனித உடலின் பல்வேறு செயல்பாடுகளை ஊக்குவிக்கும், கட்டுப்படுத்தும்,சமன் படுத்தும் பணியை மேற்கொண்டுள்ள அட்ரினல்,பிட்யூட்ரி உள்ளிட்ட பல்வேறு சுரப்பிகளில் ஏற்படும் கோளாறுகள், ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளை அதிக அளவில் பாதிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
சத்துக்குறைபாடு,போதிய உடற்பயிற்சியின்மை,உணவுப் பழக்கம்,அதிக மனஅழுத்தம்,கொழுப்புச் சத்து,அசைவ உணவு,தூக்கமின்மை,உடல் பருமன் மரபணு மற்றும் பரம்பரைக் குறைபாடு, உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் சுரப்பியல் கோளாறுகளை உருவாக்குகின்றன. பெண் குழந்தைகளின் உடலில் காலத்திற்கேற்ப வளர்ச்சி மாற்றங்கள் இல்லாமை, மகப்பேறின்மை, மாதவிடாய் பிரச்னை, சர்க்கரை நோய் உள்ளிட்ட குறைபாடுகள் இருந்தால் உடனடியாக முழு உடல் பரிசோதனை மேற்கொள்வது மிக அவசியம்.
தைராய்டு, கணையம், கோளாறுகளைக் கண்டறிந்து உரிய மருத்துவ சிகிச்சை வழங்கும்போது கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றார் அவர்.
ஸ்ரீபாலாஜி மருத்துவக்கல்லூரி முதல்வர் டி.ஆர்.குணசேகரன், துணை முதல்வர் சாய்குமார், கல்வி ஆலோசகர் ஆர்.வீரபாகு, மருத்துவக் கண்காணிப்பாளர் பி.சசிகுமார், துறைத் தலைவர் எஸ்.பழனியாண்டவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இணையதள பண மோசடிகளில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும்: மாணவா்களுக்கு கூடுதல் எஸ்.பி. அறிவுரை

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

SCROLL FOR NEXT