செய்திகள்

104 சேவைக்கு 4 ஆயிரம் அழைப்புகள்

தினமணி

த்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியானதைத் தொடர்ந்து 104 தொலைபேசி சேவைக்கு சுமார் 4 ஆயிரம் அழைப்புகள் சென்றன.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதைத் தொடர்ந்து 104 சேவையில் ஆலோசனை வழங்குவதற்காக 8 உளவியல் ஆலோசகர்கள் குழு அமைக்கப்பட்டது.
இது தொடர்பாக 104 மருத்துவ சேவையின் மண்டல மேலாளர் பிரபுதாஸ் கூறியது: பெரும்பாலும் மாணவர்களே ஆலோசனைக்காக அழைத்திருந்தனர். குறைவான மதிப்பெண் பெற்றோர், தேர்ச்சி பெறாதோர், அதிக மதிப்பெண் பெற்றும் திருப்தி இல்லாத மாணவர்கள் அதிக அளவில் அழைத்திருந்தனர்.
மதிப்பெண் குறைந்ததால் தற்கொலை எண்ணத்தோடும் சில மாணவர்கள் அழைத்தனர். அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகள், பெற்றோருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன.
வெள்ளிக்கிழமை மாலை தேர்வு தொடர்பாக 4 ஆயிரம் அழைப்புகள் வந்துள்ளன. 220 பேருக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட்டன என்றார் அவர்.
ரேங்க் முறை ரத்து செய்யப்பட்டுள்ளதால் சக மாணவர்கள், பெற்றோரிடம் இருந்து மாணவர்களுக்கு அளிக்கப்படும் அழுத்தம் குறைந்துள்ளது. இதனால் ஆண்டுதோறும் ஏற்படும் பரபரப்பு குறைந்துள்ளது என்று உளவியல் ஆலோசகர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT