முகப்பு
செய்திகள்

உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் கோதுமை காபி

முழு கோதுமையை வெறும் வாணலியில் போட்டு நன்கு சிவக்க வறுத்து எடுக்கவும்.  

செய்திகள்

உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் கோதுமை காபி

முழு கோதுமையை வெறும் வாணலியில் போட்டு நன்கு சிவக்க வறுத்து எடுக்கவும்.  

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:04 PM
பகிர்:

தேவையான பொருட்கள் :

தோல் நீக்கப்பட்ட சுத்தமான முழு கோதுமை - 500 கிராம்
மல்லி - 50 கிராம்
பனை வெல்லம் - தேவைக்கேற்ப

செய்முறை :

முழு கோதுமையை வெறும் வாணலியில் போட்டு நன்கு சிவக்க வறுத்து எடுக்கவும். (கறுகக் கூடாது, நல்ல பதத்தில் இருப்பது முக்கியம்)

மிக்ஸியில் அதனைப் போட்டு நைசாக பொடிக்கவும்.

மல்லியையும் சிவக்க வறுத்து பொடி செய்து கலந்து கொள்ளவும்.

இந்தக் காபி பொடியை இரண்டு டீஸ்பூன் பால் அல்லது தண்ணீரில் கொதிக்க வைத்து பனை வெல்லம் கலந்து குடிக்கலாம்.

காபியை அடிக்கடி குடிப்பதைத் தவிர்க்க இதை பருகலாம். இதன் சுவை காபியின் சுவை போலவே இருக்கும். சுவைக்கு சுவை, ஆரோக்கியத்துக்கும் நல்லது.

இந்த காபியை ரெகுலராக குடித்து வந்தால் உயர் ரத்த அழுத்தம் குறையும்.

முழு கோதுமையுடன், சுவை சேர்க்க ராகி, சோளம் இரண்டையும் சேர்த்து வறுத்துப் பொடித்து வைத்துக் கொள்ளலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →