செய்திகள்

தினமும் தலைமுடி அதிகமாக உதிர்கிறதா? இதோ தீர்வு

வைட்டமின்கள் (ஏ, பி, சி, ஈ மற்றும் கே), கனிமங்கள், கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம்

கோவை பாலா


சத்துக்கள் : வைட்டமின்கள் (ஏ, பி, சி, ஈ மற்றும் கே), கனிமங்கள், கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் ஜிங்க் வளமையாக உள்ளது. மேலும் சவ்வு போன்ற நார்ச்சத்தும் வெண்டைக்காயில் அதிகமாக உள்ளது.

தீர்வு : வெண்டைக்காய் (10) எடுத்து  சிறிதாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைத்து அந்த தண்ணீரை சூடு பொறுக்கும் அளவி கூந்தலில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின்பு பாசிப்பயிறு அல்லது சீயக்காய் போட்டு குளித்து வந்தால் கூந்தல் உதிர்தலை தடுக்க முடியும்.

ஆடு தீண்டா பாளை இலைகளை எடுத்து நிழலில் உலர்த்தி பொடியாக்கி சீயக்காய் தூளுடன் கலந்து வைத்துக் கொண்டு தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி கொட்டுவது உடனே நிற்கும். தினமும் ஒருவேளை உணவில் வெண்டைக்காய் மற்றும் கோவக்காய் இரண்டையும் போதுமான அளவில் எடுத்து நீராவியில் வேக வைத்து அதனுடன் சீரகம்  சேர்த்து  பொறியல் செய்து உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளவும்.

வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் இரவு படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 2 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை!

திமுக ஆட்சியில் அரசு மருத்துவமனையில் கூட பாதுகாப்பு இல்லை: அண்ணாமலை

"WE SHALL COME BACK!" பாதையை விட்டு விலகியது Pslv-C62! ISRO தலைவர் வி. நாராயணன்

ஜன. 23-ல் பிரதமர் மோடி தமிழகம் வருகை! ஒரே மேடையில் என்டிஏ கூட்டணி கட்சித் தலைவர்கள்!

ரூ.12 லட்சத்தில் தனக்குத் தானே கல்லறை கட்டிய முதியவர் மரணம்!

SCROLL FOR NEXT