செய்திகள்

இளம் பருவத்தினரும் இந்தப் பிரச்னையால் அவதிப்படுகிறார்கள்!

தினமணி

இன்றைய நிலையில், பெரும்பாலான மக்களை ஆட்டிப்படைக்கும் நோய்களுள் ஒன்று மூட்டுவலி. வயதானவர்கள் மட்டுமின்றி இளம் பருவத்தினரும் தற்போது மூட்டுவலியால் அவதிப்படுகிறார்கள்.

உடலிலுள்ள எலும்பு மண்டல அமைப்பு பலவீனமாக இருப்பதே மூட்டுவலி பாதிப்புக்கு முக்கிய காரணம். இந்த மூட்டுவலி பிரச்னையிலிருந்து தீர்வு பெற ஒருசில உணவுப் பழக்கவழக்கங்களை கடைப்பிடித்தால் போதும்.

ஆப்பிளில் இருந்து தயாரிக்கப்படும் வினிகர் மூட்டுவலியை குறைக்க உதவும். அதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து மூட்டு பகுதிகளில் தடவி மசாஜ் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

எள்ளில் தாமிரம், மாங்கனீஸ், பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, துத்தநாகம் மற்றும் மாலிப்டினம் (ஙர்ப்ஹ்க்ஷக்ங்ய்ன்ம்) ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. எள், ஆன்டிஆக்ஸிடன்ட்களை உருவாக்கி, முடக்கு வாதத்தையும் அதனால் ஏற்படும் வீக்கத்தையும் குறைக்கும்.

எலுமிச்சை சாறை நீரில் கலந்தோ, எலுமிச்சை டீயாகவோ தினமும் பருகி வரலாம். இது உடல் வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்தி வலிகளை குறைக்கும்.

பாதாம் பருப்பு போன்ற "நட்ஸ்' வகைகளில் கால்சியம், பொட்டாசியம் மற்றும் புரதம் நிறைந்துள்ளன. எனவே, சத்தான எலும்புகள் பெற தினமும் நட்ஸ் சாப்பிடுவது சிறந்தது.

 - கவிதா பாலாஜிகணேஷ்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

SCROLL FOR NEXT