உணவே மருந்து

இயற்கை உணவு, மூலிகை மருத்துவம் குறித்த விழிப்புணர்வு அதிகரிப்பு

தினமணி

உலகெங்கும் ரசாயன பயன்பாடு இல்லாமல் விளைவிக்கப்பட்ட இயற்கை உணவு தானியங்கள், பயிர்கள், பழங்கள் மற்றும் மூலிகை மருத்துவப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது என்று பிரிட்டன் ஈஸ்ட் லண்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் மைக்கேல் சீட் கூறினார்.

சென்னையை அடுத்த வண்டலூர் பி.எஸ்.அப்துர்ரகுமான் பல்கலைக்கழக மானுடவியல் துறையும், ஈஸ்ட் லண்டன் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய சர்வதேச மாநாட்டில் அவர் மேலும் பேசியது:

பல நூறு ஆண்டுகளுக்கு முன் பயன்பாட்டில் இருந்த இயற்கை உணவு, நோய்களைக் குணமாக்கும் திறன் கொண்ட மூலிகை மருந்து பொருட்களுக்கு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இதற்கு ரசாயன பொருட்களின் மேலாதிக்க பயன்பாடுதான் காரணம். எனவே, அந்த நிலையில், இருந்து விலகி, பாரம்பரிய பொருட்களின் சிறப்பு இயல்புகள் குறித்த ஆய்வு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேம்படுத்துவது அவசியமாகும் என்றார் அவர்.

ஈஸ்ட் லண்டன் பல்கலைக்கழக மருந்தியல் துறை இணைப் பேராசிரியர் முக்லேசூர் ரகுமான், அப்துர் ரகுமான் பல்கலைக்கழகத் துணை வேந்தர் வி.எம்.பெரியசாமி, இயக்குநர் வி.என்.ஏ.ஜலால், துறைத் தலைவர் எஸ்.ஹேமலதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவில்பட்டி அருகே மின்னல் பாய்ந்ததில் மூதாட்டி பலி

பாளை.யில் குழந்தைகளுக்கு பரிசளிப்பு

பத்தமடை அருகே திருட்டு: இளைஞா் கைது

ரோகிணி பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்

தென்காசி - நெல்லைக்கு கூடுதல் பேருந்து: மதிமுக மனு

SCROLL FOR NEXT