உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!
- முடக்கு வாதம், விரை வாதம் குணமாக வாதநாராயணன் கீரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதனுடன் பூண்டு (3 பல்), சுண்டைக்காய், பெருங்காயம், விளக்கெண்ணெய் சேர்த்து வதக்கி அரைத்துச் சாப்பிட்டு வந்தால் முடக்கு வாதம், விரை வாதம் குணமாகும்.
- வாதநோய் குணமாக வாதநாராயணன் கீரை மற்றும் வேர்ப் பட்டை இரண்டையும் சிறிதளவு எடுத்து நன்றாக அரைத்து தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் வாதநோய் சார்ந்த பிரச்சனை குணமாகும்.
- வாயுத் தொல்லை நீங்க வாதநாராயணன் கீரையைக் காயவைத்துப் பொடிசெய்து வைத்துக்கொண்டு தினமும் (5கிராம்) பொடியை எடுத்து சுடுநீரில் கலந்து காலை வேளையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வாயுத்தொல்லை தீரும்.
- மூட்டு வலி, இடுப்பு வலி குணமாக வாதநாராயணன் கீரையை கேழ்வரகு மாவில் சேர்த்து தோசை செய்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி, இடுப்பு வலி குணமாகும். வாதநாராயணன் கீரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதனை கஷாயமாக்கிச் சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி, இடுப்பு வலி, கழுத்து வலி போன்றவை குணமாகும்.
- நகச்சுத்தி குணமாக வாதநாராயணன் கீரையை நன்றாக அரைத்து வெண்ணெய் சேர்த்து நகச்சுத்தி மீது வைத்து துணியால் கட்டிக்கொண்டு வந்தால் மூன்றே நாள்களில் நகச்சுத்தி குணமாகும்.
KOVAI HERBAL CARE VEGETABLES CLINIC
கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் காய்கறி சிகிச்சையாளர்.
Cell : 96557 58609 / Covaibala15@gmail.com