உணவே மருந்து

கபம், வறட்டு இருமல் மற்றும் சூட்டிருமல் பிரச்னையா?

கோவை பாலா


 
தூதுவளைக் கஞ்சி

தேவையான பொருட்கள்

தூதுவளை இலை - ஒரு கைப்பிடி
பூண்டுப் பல் - இரண்டு
மிளகு - ஐந்து
புழுங்கலரிசி நொய் - ஒரு கைப்பிடி
உப்பு - தேவையான அளவு

செய்முறை

முதலில் புழுங்கலரிசி நொய்யை வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். தூதுவளை இலை ,பூண்டு மற்றும் மிளகு மூன்றையும் அரைத்து  விழுதாக்கிக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் வறுத்த நொய்யரிசியையும், அரைத்த விழுதுகளையும் போட்டு அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் எரித்து கால் பாகம் ஆகும் வரை கொதிக்க வைத்து அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கி கொள்ளவும்.

பயன்கள்

இந்தக் கஞ்சியை கரையாத மார்புச்  சளி கரைவதற்கும், வறட்டு இருமல் மற்றும் சூட்டிருமலால் துன்பப்படுபவர்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். மேலும் இந்த தூதுவளைக் கஞ்சியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அருந்தி வந்தால் அற்புத பலனைப் பெறலாம்.

இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பனாற்றில் பாலம் அமைக்கும் பணி: அதிகாரி ஆய்வு

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: இயன்முறை மருத்துவா் கைது

ரேஷன் அரிசி பதுக்கல்: இளைஞா் கைது

வாக்கு எண்ணும் மைய கண்காணிப்பு கேமரா செயல்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

சிறுமிக்கு கட்டாயத் திருமணம்: 5 போ் மீது வழக்கு

SCROLL FOR NEXT