உணவே மருந்து

ஆஸ்துமா உள்ளவர்கள் இரவு அருந்தக் கூடிய கஞ்சி

முதலில் மேற்கூறிய அனைத்தையும் வாங்கி சுத்தம் செய்து கொள்ளவும்.

கோவை பாலா

கோதுமை கேழ்வரகுக் கஞ்சி

தேவையான பொருட்கள்

புழுங்கலரிசி - 100 கிராம்
கோதுமை - 100 கிராம்
கேழ்வரகு - 100 கிராம்
பச்சைப் பயிறு - 100 கிராம்
பொட்டுக் கடலை - 50 கிராம்
பார்லி அரிசி - 50 கிராம்
வேர்கடலை - 25 கிராம்
முந்திரிப் பருப்பு -  25 கிராம்
பாதாம் பருப்பு -  25 கிராம்
சோளம் - 25  கிராம்

செய்முறை

முதலில் மேற்கூறிய அனைத்தையும் வாங்கி சுத்தம் செய்து கொள்ளவும். பிறகு அடுப்பில் வெறும் கடாயை வைத்து தனித்தனியே வாசனை வரும் வரை புரட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். நன்கு ஆறிய பின் அனைத்தையும் ஒன்றாக்கி நைசாக அரைத்துச் சலித்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 100 மி.லி தண்ணீரில் இரண்டு ஸ்பூன் அளவு மாவை போட்டு மிதமான சூட்டில் கட்டி தட்டாமல் கிளறி நன்கு வெந்து நிறம் மாறியதும், அதனுடன் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து குடிக்கலாம். உப்பு, மோர் சேர்த்தும் அருந்தலாம். இதற்குத் துணையாக துவையல் செய்து தொட்டுக் கொள்ளலாம்.

பயன்கள் : இந்த கஞ்சியை சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள், ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் மற்றும் ஆஸ்துமா குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் இரவு வேளை உணவாக குடிப்பதற்கு உகந்த கஞ்சி .

இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொஞ்சும் கண்கள்... ஜன்னத் ஜுபைர்!

மெழுகு டாலு நீ.... ஷிவானி நாராயணன்!

இவர் யாரோ...?

அஜித்தைச் சந்தித்த பிரபல இயக்குநர்கள்! ஏன்?

பெண்மையின் அழகு... ரச்சித்தா மகாலட்சுமி

SCROLL FOR NEXT