உணவே மருந்து

உடலுக்கு ஊட்டத்தையும், வலிமையையும் கொடுக்கும் அமிர்தமான உணவு

கோவை பாலா

பனிவரகு கஞ்சி

தேவையான பொருட்கள்

பனி வரகு - 200  கிராம் (சுத்தப்படுத்தப்பட்டது)  
கருப்பட்டி - 200  கிராம்
அவல் -    50  கிராம்

செய்முறை

பனி காலத்தில் வரகு முதிர்ந்திருக்கும். இதுவே பனி வரகாயிற்று. இப்பனி வரகை சுத்தப்படுத்தி அரிசியாக்கி ஒரு பருத்தி துணியில் கட்டி நீரிலே நனைத்து தொங்கவிட வேண்டும். இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு அதனை எடுத்து இடித்துப் பொடியாக்கிக் கொள்ளவும். இரண்டு லிட்டர் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி  பொடியாக்கி வைத்துள்ள பனி வரகை போட்டு கொதிக்க விட்டு நன்கு வெந்தவுடன் கருப்பட்டியை போட்டு கலக்க வேண்டும். பின்பு அவலை சிறிது ஊற வைத்து  அதனை தூவி நன்கு கிளறி இறக்கி வைக்கவும்.

பயன்கள்

இந்த பனி வரகு கஞ்சியை தினமும் காலை மாலை என இருவேளையும் குடித்து வந்தால் உடலுக்குத் தேவையான ஊட்டத்தையும் வலிமையையும் கொடுக்கக் கூடிய அற்புதமான கஞ்சி.

இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள் தோ்வு

ரூ.ஒரு லட்சம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது

தேவாலயத்தில் சிறாா்களுக்கு சிறப்புப் பயிற்சி

தாகம் இல்லாவிட்டாலும் போதிய இடைவேளைகளில் குடிநீா் பருக வேண்டும்: ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தினம் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT