உணவே மருந்து

அடிக்கடி அஜீரணக் கோளாறுகள் ஏற்படுகிறதா?

அதிக தாக உணர்வை தணிக்கக் கூடியதும் மற்றும் எளிதில் செரிமானமாகக் கூடிய ஊட்டச் சத்துள்ள உணவு

கோவை பாலா

சிவப்பரிசிக் கஞ்சி

தேவையான பொருட்கள்

சிவப்பரிசி - 50  கிராம்
தண்ணீர் - 400 மி.லி
உப்பு - தேவையான அளவு

செய்முறை : முதலில் அரிசியை சுத்தம் செய்து மிக்ஸியில் போட்டு பொடித்து நொய்யாக்கிக் கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்கி அதில் நொய்யரிசியை சேர்த்துக் கிளற வேண்டும். நொய் நன்கு வெந்த பின்பு அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்ததும் இறக்கி வைக்கவும். இந்தக் கஞ்சிக்கு சுவையூட்ட நெல்லிக்காய் துவையல் அல்லது தேங்காய் துவையல் அரைத்து கஞ்சியுடன் குடித்து வந்தால் மிக அருமையான உணவாகும்.

பயன்கள் : இந்த சிவப்பரிசிக் கஞ்சியை  தொடர்ந்து குடித்து வந்தால்  சிறுநீர்  முழுமையாகவும் முறையாகவும் வெளியேற்றும். அதிகமான தாக உணர்வை சீர் செய்யும் ஆற்றல் உள்ளது. இந்தக் கஞ்சி எளிதில் செரிமானமாகக் கூடியதும் ஊட்டச் சத்து நிறைந்தும் உள்ளதால்  சிறுவர் முதல் பெரியவர் அனைவரும் அருந்தக் கூடிய ஊட்டச்சத்துள்ள உணவு.

இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT