முகப்பு
இந்தியா

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீன நடவடிக்கைகளுக்கு இந்தியா எதிர்ப்பு

பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியில் சீனா எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளக்கூடாது என சீனப் பிரதமர் லீ கெகியாங்கிடம்

Updated On : 22 மே 2013, 3:25 am IST
பகிர்:

பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியில் சீனா எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளக்கூடாது என சீனப் பிரதமர் லீ கெகியாங்கிடம் ஆட்சேபம் தெரிவித்ததாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்தார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் கட்டுமான வளர்ச்சிப் பணிகளில் உறுதுணையாக இருப்போம் என சீனா தெரிவித்துள்ளது.

சீனாவின் இந்தக் கருத்து தேவையற்ற பிரச்னைகளை உருவாக்கக் கூடும்.  இது குறித்து லீ கெகியாங்கிடம் ஆட்சேபத்தை தெரிவித்துள்ளோம். சீனப் பிரதமரின் இந்தியப் பயணம் மூலம் இரு நாடுகளும் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் சூழ்நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் சீனாவின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் லீ கெகியாங்கிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார் குர்ஷித்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.