முகப்பு
இந்தியா

தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியிலிருந்து விஜயசாந்தி தாற்காலிக நீக்கம்

மேடக் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் தெலுங்கு நடிகையுமான எம்.விஜயசாந்தியை கட்சியிலிருந்து தாற்காலிகமாக நீக்குவதாக வியாழக்கிழமை தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவர் கே.சந்திரசேகர் ராவ் அறிவித்தார்.

Updated On : 2 ஆகஸ்ட் 2013, 1:04 am IST
பகிர்:

மேடக் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் தெலுங்கு நடிகையுமான எம்.விஜயசாந்தியை கட்சியிலிருந்து தாற்காலிகமாக நீக்குவதாக வியாழக்கிழமை தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவர் கே.சந்திரசேகர் ராவ் அறிவித்தார்.

விஜயசாந்தி கட்சி விரோதச் செயல்களில் ஈடுபட்டுவருவதாக புகார் வந்ததன்பேரில் அவர் மீது இந்த ஒழுங்கு நடவடிக்கையை மேற்கொள்ளும்படி கட்சியின் ஆட்சிமன்றக்குழு தன்னை கேட்டுக்கொண்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த 2 தினங்களாக தில்லியில் முகாமிட்டுள்ள விஜயசாந்தி காங்கிரஸ் கட்சியில் சேருவதற்காக தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தார். ஹைதராபாதை ஒட்டியுள்ள மேடக் நாடாளுமன்றத் தொகுதியில் கட்சித் தலைவர் கே.சந்திரசேகர் ராவ் போட்டியிட விரும்புகிறார். அக்கட்சியைச் சேர்ந்த வேறு சிலருக்கும் அந்த விருப்பம் உள்ளது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.