முகப்பு
இந்தியா

சிறுபான்மையினரை பாதுகாக்க தவறி விட்டது காஷ்மீர் அரசு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சிறுபான்மையினரை பாதுகாக்க ஒமர் அப்துல்லா தவறிவிட்டதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

Updated On : 12 ஆகஸ்ட் 2013, 12:25 am IST
பகிர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சிறுபான்மையினரை பாதுகாக்க ஒமர் அப்துல்லா தவறிவிட்டதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

கிஷ்த்வார் செல்வதற்காகச் சென்ற பாஜக மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி, ஜம்மு விமான நிலையத்

தில் தடுத்து நிறுத்தப்பட்டதற்கும் பாஜக கடுமையாக சாடியது.

Advertisement

Advertisement

இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் ஹூசைன் கூறுகையில், "மாநிலத்தில் உள்ள சிறுபான்மையினரை ஒமர் அப்துல்லா தலைமையிலான மாநில அரசு காக்கத் தவறிவிட்டது. வகுப்பு மோதல் சம்பவம் குறித்து மாநில அரசிடம் பாஜக ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தது' என்று தெரிவித்திருந்தார்.

கிஷ்த்வார் மாவட்டத்துக்குச் சென்று மக்களை அமைதிப்படுத்தவே, அருண் ஜேட்லி ஜம்மு-காஷ்மீர் சென்றுள்ளார். ஆனால், அவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதுவே, பிரதமரோ அல்லது உள்துறை அமைச்சரோ அங்கு செல்ல விரும்பியிருந்தால் அவர்களை எப்படி மாநில அரசு தடுத்திருக்க முடியும்? என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

மாநில அரசு, தேசியவாதிகளை கைது செய்கிறது; தேசத்துக்கு எதிரானவர்களை விடுவிக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

அருண் ஜேட்லியை கிஷ்த்வார் மாவட்டத்துக்குள் அனுமதிக்காதது, வகுப்பு மோதல் சம்பவம் குறித்த உண்மை வெளிவர மாநில அரசு விரும்பாததைக் காட்டுகிறது என குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்த அவர், "அருண் ஜேட்லி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைர்கள் கிஷ்த்வாருக்குச் செல்ல அனுமதி மறுத்தப்பட்டது ஜனநாயக முறைக்கு எதிரானது' என்று தெரிவித்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.