முகப்பு
இந்தியா

மருத்துவ சிகிச்சைக்காக இன்று அமெரிக்கா செல்கிறார் சோனியா

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மருத்துவப் பரிசோதனைக்காக திங்கள்கிழமை மாலை அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் செல்வதாக கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Updated On : 1 செப்டம்பர் 2013, 11:07 pm IST
பகிர்:

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மருத்துவப் பரிசோதனைக்காக திங்கள்கிழமை மாலை அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் செல்வதாக கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கள்கிழமை மாலையில் சோனியா காந்திக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொற்றுக் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறியதையடுத்து, மருத்துவர்கள் அவரது உடல்நிலையைப் பரிசோதனை செய்தனர். அதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை அதிகாலையில் அவர் வீடு திரும்பினார்.

இந்நிலையில், சனிக்கிழமை மாலையில் மீண்டும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சோனியா காந்தி சென்றார். அங்குள்ள ராஜேந்திர பிரசாத் கண் சிகிச்சை மையத்தில் அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் சிகிச்சை முடிந்ததும் சோனியா காந்தி வீடு திரும்பினார். "கண் பார்வை, எரிச்சல் காரணமாக மருத்துவமனைக்கு வந்த சோனியா, சிகிச்சை முடிந்ததும் வீடு திரும்பினார்' என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

இதற்கிடையே, சோனியா காந்தி மருத்துவப் பரிசோதனைக்காக திங்கள்கிழமை மாலை அமெரிக்கா செல்ல உள்ளார்.

2011-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் வெளிநாட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவருக்கு அறுவை சிகிச்சை நடந்ததாகவும் தனிப்பட்ட அவரது மருத்துவ சிகிச்சை விவகாரங்களை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் அப்போது காங்கிரஸ் கட்சி கேட்டுக் கொண்டது. அதன் பிறகு கடந்த ஆண்டிலும் இதே காலகட்டத்தில் சோனியா காந்தி வெளிநாட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.