இந்தியா

அனைத்துமுனைகளிலும் மோடி அரசு தோல்வி: காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் திக்விஜய்சிங்

பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு அனைத்து முனைகளிலும் தோல்வி அடைந்துள்ளதுஎன்று காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் தெரிவித்தார்.

முத்துமணி

பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு அனைத்து முனைகளிலும் தோல்வி அடைந்துள்ளதுஎன்று காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் தெரிவித்தார்.

இது குறித்து பெங்களூரு, காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: லலித்மோடி விவகாரத்தில் சட்டவிதிமுறைகளை மீறியுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரராஜேசிந்தியா, வியாபம் ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ்சிங்செüஹான் ஆகியோர் ராஜிநாமா செய்ய வேண்டுமென்று காங்கிரஸ் தனதுநிலைப்பாட்டை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தெளிவாக எடுத்துரைத்துள்ளது. கடந்த 10 ஆண்டுகால ஐக்கியமுற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது எதற்கெடுத்தாலும் நாடாளுமன்றத்தை முடக்கிய பாஜக, தற்போது காங்கிரஸ் கட்சியை குற்றம்சாட்டிவருகிறது.

லலித்மோடிக்கு உதவும்படி இங்கிலாந்து அரசுக்கு சுஷ்மாஸ்வராஜ் தனது கைப்பட மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார். மனிதநேயத்தின் அடிப்படையில் செயல்படுவதாக இருந்தால்,அது குறித்து கவனித்து நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத்துறை செயலாளருக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் விதிகளுக்கு புறம்பாகவும், ரகசியகாப்புபிரமாணத்திற்கு எதிராகவும் செயல்பட்டிருக்கிறார்.

அதேபோல, வசுந்தரராஜேசிந்தியாவும் சட்டமுறைகேடாக நடந்துகொண்டிருகிறார். வியாபம் ஊழல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்குமாறு 2006-ஆம் ஆண்டு முதல் வலியுறுத்தி வந்திருக்கிறோம். இந்தியாவின் மிகப்பெரிய ஊழலை புரிந்துள்ள சிவராஜ்சிங்செüஹான், தார்மீக அடிப்படையில் தனது பதவியை உடனடியாக ராஜிநாமா செய்திருக்க வேண்டும். ஐக்கியமுற்போக்கு கூட்டணி ஆட்சிகாலத்தில் ஊழல் வழக்கை எதிர்கொண்ட அமைச்சர்கள் ராஜிநாமா செய்திருக்கிறார்கள். ஆனால் பாஜக ஆட்சியில் யாரும்ராஜிநாமா செய்ய முன்வரவில்லை.

காங்கிரஸ், நாட்டின் வளர்ச்சியை தடுப்பதாக மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி கூறியிருக்கிறார். ஐக்கியமுற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது 2006-இல் ஜிஎஸ்டி மசோதாவை நாடாளுமன்றத்தில் எதிர்த்தவர்கள் இதே பாஜகவினர். அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திரமோடி, ஜிஎஸ்டிமசோதாவை கடுமையாக எதிர்த்தார். இப்போது அதே மசோதாவை நிறைவேற்ற காங்கிரஸ் முன்வரவில்லை என்று குற்றம்சாட்டுகிறார்கள். ஜிஎஸ்டிமசோதாவை நிறைவேற்றும்போது பிரதமர் நரேந்திரமோடி மக்களவைக்கு வராதது ஏன் மெüனமாக இருப்பது தனக்கு சாதகமானதாக மோடி கருதுகிறார்.

நேரு குடும்பத்தை சுஷ்மாஸ்வராஜ் விமர்சித்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த நாட்டுக்காக அந்த குடும்பம் 2 தலைவர்களின் உயிரை தியாகம் செய்துள்ளது. சுதந்திரத்திற்கும் முன்பும், பின்பும் அந்த குடும்பம் நாட்டுக்கு ஆற்றியுள்ளபங்களிப்பை மறக்கமுடியாது. சோனியாகாந்தி, ராகுல்காந்தியின் செய்தொழிலை கேட்கும் மோடியின் செய்தொழில் என்னவோ காங்கிரஸ் முன்வைக்கும்பிரச்னைகளை மூடிமறைப்பதற்காக தனிமனித தாக்குதலில் பாஜக ஈடுபட தொடங்கியுள்ளது. ராஜிநாமா விவகாரத்தை காங்கிரஸ் கைவிடவில்லை. இந்தவிவகாரத்தை மக்கள் மன்றத்தில் முறையிடுவோம்.

பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலானமத்திய பாஜக அரசு அனைத்துமுனைகளிலும் படுதோல்வியை சந்தித்துள்ளது. நாட்டில் பொருளாதார வளர்ச்சி எதுவுமில்லை. விவசாயிகள் துன்பத்தில்தத்தளிக்கிறார்கள். விலைவாசியை வானளவு உயர்ந்துள்ளது. விவசாயிகளுக்கு குறைந்தப்பட்ச ஆதரவுவிலையை அறிவிக்கவில்லை. மோடியின் ஆட்சி முழுமையாகதோல்வி அடைந்துள்ளது.

இந்து மற்றும் முஸ்லீம் மத அடிப்படைவாதத்தை என்றைக்கும் காங்கிரஸ் ஏற்காது. அண்மைகாலமாக நமதுநாட்டின் மதவாதம் பெருகியுள்ளது. இதற்கு எதிராக காங்கிரஸ் தொடர்ந்து போராடும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சிறப்பு பொதுக்குழு திருப்புமுனையாக அமையும்: மருத்துவா் ராமதாஸ்

முதல்வரின் தாயுமானவா் திட்டம்: நகரப் பகுதிகளில் பொருள்கள் வழங்கல்

விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் பயிற்சிப் பட்டறை

முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்தடைந்த 1,975 மெ.டன் உர மூட்டைகள்

விழுப்புரத்தில் விரைவில் அறிமுகமாகிறது தாழ்தள நகரப் பேருந்து சேவை

SCROLL FOR NEXT