உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக டி.எஸ். தாக்குரை நியமித்து குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று உத்தரவிட்டுள்ளார். அவர் வருகிற டிசம்பர் 3 ஆம் தேதி பதவியேற்கிறார்.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள எச்.எல்.தத்துவின் பதவிக்காலம் வரும் டிசம்பர் 2-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனைத் தொடர்ந்து, தனக்கு அடுத்தபடியாக உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவிக்கு டி.எஸ்.தாக்குரின் பெயரை மத்திய அரசுக்கு எச்.எல்.தத்து அண்மையில் பரிந்துரைத்தார். இதை பரிசீலித்த பிரதமர் அலுவலகம், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது.
இதையடுத்து புதிய தலைமை நீதிபதியாக டி.எஸ்.தாக்குரை நியமித்து குடியரசு தலைவர் இன்று உத்தரவிட்டார். அவர் வருகிற டிசம்பர் 3 ஆம் தேதி பதவியேற்கிறார்.
கடந்த 1952 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பிறந்த தாகுர், 1990 ஆம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்தார். பின்னர் ஜம்மு காஷ்மீர் மாநில உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
பல்வேறு உயர்நீதிமன்றங்களில் பணியாற்றிய அவர் 2009 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.