பிகார் மாநிலத்தின் முதல்வராக 5வது முறையாக நிதிஷ்குமார் இன்று பதவியேற்றுக் கொண்டார். பாட்னாவில் நடைபெற்ற இவ்விழாவில் 8 மாநில முதல்வர்களும், 2 லட்சம் மக்களும் பங்கேற்றனர்.
பிகாரில் முதல் முறையாக ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரிய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணிக் கட்சி, நிதிஷ்குமார் தலைமையில் இன்று ஆட்சி பொறுப்பேற்றது.
பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் இன்று வெகு விமரிசையாக நடைபெற்ற விழாவில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், கர்நாடக முதல்வர், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உட்பட 8மாநில முதல்வர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் தேவ கவுடா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா, தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இவர்கள் மட்டும் அல்லாமல், தொழிலாளர்கள், கட்சித் தொண்டர்கள் என 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் விழாவில் கலந்து கொண்டு பதவியேற்பினை நேரடியாகப் பார்த்தனர்.
பதவியேற்பு விழாவுக்காக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.