இந்தியா

அமீர் கானின் ஒவ்வொரு வார்த்தையும் உண்மை: தில்லி முதல்வர் கேஜரிவால்

சகிப்பின்மை குறித்த அமீர் கானின் ஒவ்வொரு வார்த்தைகளும் உண்மையானவை என தில்லி முதல்வர் கேஜரிவால் கூறினார்.

PTI

சகிப்பின்மை குறித்த அமீர் கான் பேசிய வார்த்தைகள் அனைத்தும் உண்மையானவை என தில்லி முதல்வர் கேஜரிவால் கூறினார்.

தில்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமீர் கான், இந்தியாவில் நிலவும் சகிப்பின்மையால், நாட்டை விட்டு வெளியேறி விடலாமா அவரது மனைவி கிரண் கேட்டுக் கொண்டதாக கூறினார்.

அமைதியின்மை அதிகரித்து வருவதாலும், குழந்தைகளின் பாதுகாப்பை கருதியும் கிரண் இவ்வாறு கூறியதாக அமீர் கான் பேசினார்.

அமீர் கானின் இந்த பேச்சு குறித்து டூவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள ஜேரிவால், அமீர் கானின் ஒவ்வொரு வார்த்தைகளும் உண்மையானவை. இதுகுறித்து பேசியதற்காக நான் அவரை பாராட்டுகிறேன் என்றார்.

ஆளும் பாரதீய ஜனதா கட்சி, அமைதியாக இருப்பதை கைவிட்டு நாட்டில் அமைதியை ஏற்படுத்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார் கேஜரிவால்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT