ஸ்ரீநகர்: மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெஹபூபா முஃப்தி, காஷ்மீரின் முதல் பெண் முதல்வராக வரும் 4ம் தேதி பதவியேற்க உள்ளார்.
காஷ்மீர் முதல்வராக மெஹபூபா முஃப்தி வரும் 4ம் தேதி பதவியேற்கிறார் என்று மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் அமிதாப் மாட்டூ தெரிவித்தார்.
காஷ்மீர் முன்னாள் முதல்வர் முஃப்தி மொஹம்மது சயீத்தின் அரசியல் ஆலோசகராக பணியாற்றி வந்த மாட்டூ, 56 வயதாகும் மெஹபூபா, காஷ்மீரின் அமைதிக்காகவும், மேம்பாட்டுக்காகவும் புதிய திட்டங்களைக் கையாள்வார் என்று நம்புவதாகக் குறிப்பிட்டார்.
மெஹபூபாவின் பதவியேற்புக்குப் பிறகு, மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் பாஜக தலைவர்கள் சந்தித்துப் பேசி, அமைச்சரவை பதவியேற்பு குறித்து முடிவு செய்வார்கள் என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.