இந்தியா

மேற்கு வங்கம்: கடலில் சிக்கித் தவித்த 15 மீனவர்கள் மீட்பு; 5 பேர் பலி

தினமணி

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், 24 பர்கானா மாவட்டத்தில் நடுக்கடலில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 15 மீனவர்களை இந்தியக் கடலோரக் காவல் படையினரும், வங்க தேச கடலோரக் காவல் படையினரும் பத்திரமாக மீட்டனர். 5 மீனவர்களின் சடலங்களும் அந்தப் பகுதியில் இருந்து அவர்களால் கண்டெடுக்கப்பட்டன.
இதுகுறித்து 24 பர்கானா மாவட்ட ஆட்சியர் பி.பி.சலீம் கூறியதாவது: மீன்பிடிப்பதற்காக கடலுக்குள் சென்று வீடு திரும்பாத மீனவர்களைத் தேடும் பணிகளில் இந்திய கடலோரக் காவல் படையினரும், வங்கதேச கடலோரக் காவல் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்கள் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் ஞாயிற்றுக்கிழமை காலை 2 படகுகளில் இருந்த 15 மீனவர்கள் பத்திரகமாக மீட்கப்பட்டனர். போர் விமானமும் மீனவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறது என்று சலீம் தெரிவித்தார்.
இதுகுறித்து மேற்கு வங்க மீனவர்கள் சங்கத் தலைவர் ஜாய்கிருஷ்ணா ஹால்டர் கூறியதாவது:
கடந்த 1-ஆம் தேதி, மீன்பிடிப்பதற்காக 4 படகுகளில் 30-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் சென்றனர். கடந்த 8-ஆம் தேதி பலத்த மழை பெய்ததுடன், புயலும் அடித்தது.
இந்நிலையில், கடலுக்குள் சென்ற மீனவர்கள் எவரும் வீடு திரும்பவில்லை. அதைத் தொடர்ந்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில், இந்தியக் கடலோரக் காவல் படையினரும், வங்கதேச கடலோரக் காவல் படையினரும் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை நடுக்கடலில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 15 மீனவர்களை இருநாட்டு கடலோரக் காவல் படையினரும் பத்திரமாக மீட்டுள்ளனர். கடலில் மிதந்து கொண்டிருந்த 5 மீனவர்களின் சடலங்களையும் அவர்கள் கண்டெடுத்தனர்.
காணாமல் போன மீனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்றார் ஜாய்கிருஷ்ணா ஹால்டர்.
இதனிடையே, உயிரிழந்த 5 மீனவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

SCROLL FOR NEXT