முகப்பு
இந்தியா

அசோகமித்திரனின் 3 நூல்கள் ஆங்கிலத்தில் வெளியீடு

பிரபல தமிழ் எழுத்தாளர் அசோகமித்திரனின் புகழ்பெற்ற மூன்று படைப்புகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. அந்த மூன்று புத்தகங்களையும் பென்குயின் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர்.

Updated On : 16 ஆகஸ்ட் 2016, 12:43 am IST
பகிர்:

பிரபல தமிழ் எழுத்தாளர் அசோகமித்திரனின் புகழ்பெற்ற மூன்று படைப்புகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. அந்த மூன்று புத்தகங்களையும் பென்குயின் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர்.

தமிழ் இலக்கிய உலகின் முதன்மை எழுத்தாளர்களில் ஒருவரான அசோகமித்திரன், 250-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 20-க்கும் அதிகமான நாவல்கள் மற்றும் கட்டுரைத் தொகுப்புகளைப் படைத்துள்ளார். "அப்பாவின் சிநேகிதர்' என்ற சிறுகதைத் தொகுப்புக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் அவர். பல்வேறு காலகட்டங்களில் அசோகமித்திரன் எழுதிய நூல்களில் பல, ஆங்கிலத்தில் தொடர்ந்து மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் தற்போது மூன்று நூல்கள் ஆங்கில வடிவம் பெற்றுள்ளன.

1980-களின் பிற்பாதியில் அவர் எழுதிய "பாவம் டல்பதடோ' என்ற நாவல் "The Ghost of Meenambakkam"  என்ற பெயரிலும், "இருட்டிலிருந்து வெளிச்சம்' என்ற கட்டுரைத் தொகுப்பில் இடம்பெற்றிருந்த ஒரு பகுதி ""Fourteen years with Boss"  என்ற தலைப்பிலும், பல்வேறு சிறுகதைகளின் தொகுப்பு "Still bleeding from the wound" என்ற பெயரிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளன.

Advertisement

Advertisement

அதில், "Fourteen years with Boss"  என்ற புத்தகமானது, ஜெமினி ஸ்டூடியோவில் அசோகமித்திரன் பணியாற்றிய 14 ஆண்டு அனுபவங்களைப் பிரதிபலிக்கும் நூல். இதை அவரே ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார். அதேபோல், அசோகமித்திரன் பல்வேறு தருணங்களில் எழுதிய பிரசித்த பெற்ற புண் உமிழ் குருதி, இன்ஸ்பெக்டர் செண்பகராமன், வண்ணங்கள், மாறுதல்கள் உள்ளிட்ட சிறுகதைகளின் ஆங்கில மொழியாக்கத் தொகுப்பாக ""Still bleeding from the wound" என்ற புத்தகம் வெளிவந்துள்ளது. இந்த நூலையும், " "The Ghost of Meenambakkam" என்ற நாவலையும் என்.கல்யாணராமன் மொழிபெயர்த்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.