பெங்களூரிவில் தான்சானிய மாணவியின் ஆடையை களைந்து பேரணி நடத்தவில்லை என கர்நாடக உள்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.மேலும், மாணவி தாக்கப்பட்டது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விபத்தில் பெண் ஒருவர் இறந்தார். விபத்தை ஏற்படுத்திய கார் என நினைத்து மற்றொரு காரில் வந்த தான்சானிய நாட்டைச் சேர்ந்த மாணவி ஒருவரை ஒரு கும்பல் தாக்கியது. மேலும், அவரது ஆடைகளை களைந்ததாகவும் செய்திகள் வந்தன.
இச்சம்பவம் தொடர்பாக கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தாரமையாவைத் தொடர்பு கொண்ட மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், தான்சானிய மாணவியை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.
இதனிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய சித்தாரமையா, தான்சானிய மாணவி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கை முதன்மை செயலர் மூலம் மத்திய அமைச்சருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா, தான்சானிய மாணவி நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டதாக வெளியான செய்தியை மறுத்தார். மேலும், இத்தாக்குதல் இன ரீதியானது அல்ல என்றும் அவர் கூறினார். அடையாள தவறு காரணமாகவே இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது.
தான்சானிய மாணவி தாக்கப்பட்ட சம்பவம் குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் கர்நாடக அரசை வலியுறுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.