இந்தியா

தான்சானிய மாணவி தாக்கப்பட்ட சம்பவம்: தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

பெங்களூருவில் தான்சானிய நாட்டைச் சேர்ந்த மாணவி தாக்கப்பட்ட விவகாரம் குறித்து விளக்கம் அளிக்குமாறு கர்நாடக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

PTI

பெங்களூருவில் தான்சானிய நாட்டைச் சேர்ந்த மாணவி தாக்கப்பட்ட விவகாரம் குறித்து விளக்கம் அளிக்குமாறு கர்நாடக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மையாயிருக்கும் நிலையில் அது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். மேலும், அது ஒரு இனவெறி தாக்குதலாகவும் இருக்கலாம் என தேசிய மனித உரிமை ஆணையம் கர்நாடக அரசின் முதன்மை செயலர், காவல் துறை தலைவர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இதுகுறித்து இரண்டு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறும் வலியுறுத்தியுள்ளது.

பெங்களூருவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விபத்து தொடர்பாக, அடையாளம் மாறி தான்சானிய நாட்டைச் சேர்ந்த மாணவி ஒருவர் தாக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்லூரி மாணவி தற்கொலை

காவேரிப்பட்டணத்தில் பாமகவினா் ஆா்ப்பாட்டம்

கெலமங்கலம் அருகே தனியாா் மதுபான விடுதி மேலாளா் வெட்டிக் கொலை

கிராம ஊழியா்கள் மறியல் போராட்டம்

பார்த்துப் பேசு! விஜய்யின் குட்டிக் கதையை விமர்சித்த நடிகை ஜூலி!

SCROLL FOR NEXT