இந்தியா

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகே ராமர் கோயில் கட்டுவது குறித்து முடிவு செய்யப்படும்: மத்திய அமைச்சர்

நிலுவையில் உள்ள ராமர் கோயில் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகே அயோத்தியில் கோயில் கட்டுவது குறித்து அரசு முடிவு செய்யும் என மத்திய அமைச்சர் மிஸ்ரா கூறினார்.

PTI

நிலுவையில் உள்ள ராமர் கோயில் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகே அயோத்தியில் கோயில் கட்டுவது குறித்து  அரசு முடிவு செய்யும் என மத்திய அமைச்சர் மிஸ்ரா கூறினார்.

கடந்த வாரம் நடைபெற்ற விசுவ இந்து பரிஷத் கூட்டத்தில் பேசிய அதன் தலைவர்கள், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக பிரமதர் தனது மௌனத்தை கலைக்க வேண்டும் என்றும்,மோடி அயோத்திக்கு சென்று ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக உறுதிமொழியை காப்பாற்ற வேண்டும் என்றும் கூறினர்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய மத்திய  சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் மிஸ்ரா, பிரதமர் மோடி நாட்டின் பல பகுதிகளுக்கு செல்லும் நிலையில், அயோத்திக்கு செல்லாததற்கு முக்கியமான காரணம் ஏதும் இல்லை. மத தலைவர்களின் உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம். அதே நேரத்தில் பிரதமர் சுயமாக முடிவெடுப்பவர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

தேவைப்படும் நேரத்தில் பிரதமர் மோடி அயோக்கி செல்வதோடு, ராமரையும் அவர் வழிபடுவார் என்றார் அமைச்சர்.

நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பதில் பாரதீய ஜனதா கட்சிக்கு தயக்கம் ஏதும் இல்லை. ஒருமித்த கருத்தின் அடிப்படையில் கோயில் கட்டுவதற்கு நாம் முயற்சிக்க வேண்டும் என்றார்.

பிரமதர் மோடி பாகிஸ்தான் சென்ற போது தாவூர் இப்ராஹிமை சந்தித்தார் என உத்ர பிரதேச அமைச்சர் அஸம் கான் கூறியிருப்பது, அவர் இடம்பெற்றுள்ள சமாஜ்வாதி அரசு மீதான நம்பிக்கையை குறைக்கிறது என்றார் மிஸ்ரா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்லூரி மாணவி தற்கொலை

காவேரிப்பட்டணத்தில் பாமகவினா் ஆா்ப்பாட்டம்

கெலமங்கலம் அருகே தனியாா் மதுபான விடுதி மேலாளா் வெட்டிக் கொலை

கிராம ஊழியா்கள் மறியல் போராட்டம்

பார்த்துப் பேசு! விஜய்யின் குட்டிக் கதையை விமர்சித்த நடிகை ஜூலி!

SCROLL FOR NEXT