இந்தியா

உளவு பார்க்க 7 முறை இந்தியா வந்தேன்: மும்பை தாக்குதல் குறித்து டேவிட் ஹேட்லியின் பரபரப்பு வாக்குமூலம்

மும்பை தாக்குதலை நடத்த சதி திட்டம் தீட்டவும், உளவு பார்க்கவும் இந்தியாவுக்கு 7 முறை வந்துள்ளேன் என்று தீவிரவாதி ஹேட்லி கூறியுள்ளார்.

PTI

மும்பை தாக்குதலை நடத்த சதி திட்டம் தீட்டவும், உளவு பார்க்கவும் இந்தியாவுக்கு 7 முறை வந்துள்ளேன் என்று தீவிரவாதி ஹேட்லி கூறியுள்ளார்.

அமெரிக்க சிறையில் இருந்து தீவிரவாதி டேவிட் ஹெட்லி காணொலி காட்சி (விடியோ கான்பரன்சிங்) மூலமாக மும்பை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டு வாக்குமூலம் அளித்து வருகிறார்.

அதில் பல அதிர்ச்சித் தகவல்களை ஹேட்லி வாக்குமூலமாக அளித்துள்ளார்.

அதில், நான் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவன். இதுவரை 8 முறை இந்தியா வந்துள்ளேன். 2008 நவம்பர் 26ம் தேதி மும்பை தாக்குதலுக்கு முன்பு 7 முறை உளவு பார்க்கவும், தாக்குதல் நடத்த பிறகு ஒரு முறையும் இந்தியா வந்தேன்.

தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஹேட்லி அமெரிக்காவில் 35 ஆண்டு கால சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்லூரி மாணவி தற்கொலை

காவேரிப்பட்டணத்தில் பாமகவினா் ஆா்ப்பாட்டம்

கெலமங்கலம் அருகே தனியாா் மதுபான விடுதி மேலாளா் வெட்டிக் கொலை

கிராம ஊழியா்கள் மறியல் போராட்டம்

பார்த்துப் பேசு! விஜய்யின் குட்டிக் கதையை விமர்சித்த நடிகை ஜூலி!

SCROLL FOR NEXT