இந்தியா

வழிபாட்டு தலங்களில் பாகுபாடு கூடாது: மத்திய கலாச்சார அமைச்சர்

வழிபாட்டு தலங்களில் இன ரீதியிலோ, பாலினம் சார்ந்தோ பாகுபாடு இருக்கக் கூடாது என மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா கூறினார்.

PTI

வழிபாட்டு தலங்களில் இன ரீதியிலோ, பாலினம் சார்ந்தோ பாகுபாடு இருக்கக் கூடாது என மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா கூறினார்.

தில்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின் இடையே செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் இன ரீதியிலோ, பாலினம் சார்ந்தோ பாகுபாடு இருக்கக் கூடாது என்பது மத்திய அரசின் கருத்தாகும் என்றார்.

கேரள மாநிலம், சபரிமலையில் மாதவிடாய் பருவ பெண்கள் நுழைவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மத நம்பிக்கையில் அரசு தலையிட முடியாது என கேரள அரசு மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ள கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.

முன்னதாக அமைச்சர் சுற்றுலாப் பயணிகளுக்கான 24 மணி நேர தொலைபேசி வழி சேவை மையத்தை தொடக்கிவைத்தார்.

அரபு, பிரெஞ்ச், ஸ்பானிஷ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பனீஷ், ஆங்கிலம், கொரிய, சீனா, போர்ச்சுகீஸு, ரஷ்ய மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இச்சேவை வழங்கப்படுகிறது.

சுற்றுலா இடங்களை தனியாருடன் இணைந்து பராமரிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது என்றார் அமைச்சர் சர்மா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்லூரி மாணவி தற்கொலை

காவேரிப்பட்டணத்தில் பாமகவினா் ஆா்ப்பாட்டம்

கெலமங்கலம் அருகே தனியாா் மதுபான விடுதி மேலாளா் வெட்டிக் கொலை

கிராம ஊழியா்கள் மறியல் போராட்டம்

பார்த்துப் பேசு! விஜய்யின் குட்டிக் கதையை விமர்சித்த நடிகை ஜூலி!

SCROLL FOR NEXT