இந்தியா

வெளிநாடுவாழ் இந்தியருக்கு இந்தியாவில் வீடு வாங்க உரிமையுண்டு

வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு, இந்தியாவில் எந்த இடத்திலும் வீடு வாங்குவதற்கு உரிமை உள்ளது என தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் கூறியுள்ளது.

PTI

வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு, இந்தியாவில் எந்த இடத்திலும் வீடு வாங்குவதற்கு உரிமை உள்ளது என தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் கூறியுள்ளது.

தெற்கு தில்லியைச் சேர்ந்தவர் ரேஷ்மா பகத். இவரது மகன் தருண் பதக். இவர்கள் இருவரும் சூப்பர்டெக் லிமிடெட் என்ற கட்டுமான நிறுவனம் நோய்டாவில் கட்டவிருந்த சொகுசு பிளாட்டுக்காக விண்ணப்பித்தனர். இதற்காக ரூ. 64 லட்சம் வரை அவர்கள் பணம் செலுத்தியிருந்தனர்.

ஆனால்,  கட்டுமான நிறுவனம் உறுதியளித்தப்படி பிளாட்டை கட்டித் தரவில்லை. இதையடுத்து இருவரும் தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

''வெளிநாட்டில் வசிக்கும் இவர்கள் இந்தியாவில் வசிப்பதற்காக வீடு வாங்கவில்லை. அதை வாடைகைக்கு விட்டு சம்பாதிக்கும் நோக்கிலேயே வீடு வாங்குவதற்காக விண்ணப்பித்துள்ளனர். எனவே அவர்கள் நுகவோர் என்ற பிரிவின் கீழ் வரமாட்டார்கள். அவர்களது வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்'' இந்த வழக்கு விசாரணையின் போது சூப்பர்டெக் கட்டுமான நிறுவனம் கூறியது.

கட்டுமான நிறுவனத்தின் வாதத்தை மறுத்த நுகர்வோர் ஆணையம், வெளிநாடு வாழ் இந்தியர்கள் அவ்வப்போது அவர்களது சொந்த ஊருக்கு வந்து செல்கின்றனர். மேலும், சொந்த ஊரில் ஒரு வீடு வாங்க வேண்டும் என்பதே அவர்கள் அனைவரின் விருப்பமாக உள்ளது. தனி மனிதரான விண்ணப்பதாரர் இந்தியாவில் எங்கும் வீடு வாங்குவதற்கு உரிமை உள்ளது என ஆணையத்தின் தலைவர் நீதிபதி ஜெ.எம். மாலிக் கூறினார்.

மேலும், கட்டுமான நிறுவனம் விண்ணப்பதாரருக்கு வேறு இடத்தில் பிளாட் வழங்குவதாக கூறியதையும் ஆணையம் நிராகரித்தது.

வீடு வாங்குபவர்கள் அவர்களது சொந்த விருப்பத்தின்படி வாங்குவார்களே தவிர, கட்டுமான நிறுவனத்தின் விருப்பத்தின் படி வாங்க முடியாது என ஆணையம் கூறியதோடு, அந்நிறுவனம்  ரூ. 63,99,727 மனுதாரருக்கு உடன வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்லூரி மாணவி தற்கொலை

காவேரிப்பட்டணத்தில் பாமகவினா் ஆா்ப்பாட்டம்

கெலமங்கலம் அருகே தனியாா் மதுபான விடுதி மேலாளா் வெட்டிக் கொலை

கிராம ஊழியா்கள் மறியல் போராட்டம்

பார்த்துப் பேசு! விஜய்யின் குட்டிக் கதையை விமர்சித்த நடிகை ஜூலி!

SCROLL FOR NEXT