இந்தியா

இந்திய ராணுவத்தில் உளவாளியை உருவாக்க திட்டம்: ஹெட்லி

பாகிஸ்தானின் பயங்கரவாத இயக்கமான லஷ்கர்-ஏ-தொய்பா இந்திய ராணுவத்தில் உளவாளியை உருவாக்க திட்டமிட்டிருந்ததாக டேவிட் ஹெட்லி கூறினார்.

PTI

பாகிஸ்தானின் பயங்கரவாத இயக்கமான லஷ்கர்-ஏ-தொய்பா இந்திய ராணுவத்தில் உளவாளியை உருவாக்க திட்டமிட்டிருந்ததாக டேவிட் ஹெட்லி கூறினார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த அமெரிக்கரான ஹெட்லி, அமெரிக்க சிறையில் இருந்தபடி காணொலி வாயிலாக மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக மும்பை நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்து வருகிறார்.

அவர் இரண்டாவது நாளாக அளித்து வரும் வாக்குமூலம் விவரம்:

இந்திய ராணுவ ரகசியங்களை தெரிந்து கொள்வதற்காக லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பினர் தன்னை கேட்டுக் கொண்டனர். மேலும், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த ஒருவரை உளவாளியாக உருவாக்கவும் திட்டமிடப்பட்டது.

லஷ்கர்-ஏ-தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன், ஜெய்ஸ்-இ-முகம்மது, ஹர்கத்-உல்-முஜாகிதீன் ஆகிய பயங்கராவத அமைப்புகள் அனைத்தும் 'ஒருங்கிணைந்த ஜிகாத்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

அமெரிக்கா அரசால் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பு தடை செய்யப்பட்டது எதிர்த்து வழக்கு தொடருவதற்கு அதன் தலைவர்கள் ஹபீஸ் சையது, ஷகியுர்-ரெகுமான் லக்வி முடிவு செய்தனர்.

மும்பையில் நடைபெறவிருந்த இந்திய பாதுகாப்பு விஞ்ஞானிகள் கூட்டத்தின் போது தாக்குதல் நடத்தவும் லஷ்கர் அமைப்பு திட்டமிட்டிருந்தது.

கடந்த 2008 ஆம் ஆண்டு எனது மனைவி ஃபாயிஷா இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நான் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாக புகார் அளித்தார் என வாக்குமூலம் அளித்தார் ஹெட்லி.

வெளிநாட்டுச் சிறையில் கைதியாக இருக்கும் ஒருவர், இந்திய நீதிமன்றத்தில் காணொலி வாயிலாக வாக்குமூலம் அளிப்பதும் இதுவே முதல் முறையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்லூரி மாணவி தற்கொலை

காவேரிப்பட்டணத்தில் பாமகவினா் ஆா்ப்பாட்டம்

கெலமங்கலம் அருகே தனியாா் மதுபான விடுதி மேலாளா் வெட்டிக் கொலை

கிராம ஊழியா்கள் மறியல் போராட்டம்

பார்த்துப் பேசு! விஜய்யின் குட்டிக் கதையை விமர்சித்த நடிகை ஜூலி!

SCROLL FOR NEXT