நேபாளத்தின் முன்னாள் பிரதமர் சுஷில் கொய்ராலா இன்று காலை காலமானார். அவருக்கு வயது 79. அவரது மறைவுக்கு இந்திய பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் பிரணாப் உட்பட உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கொய்ராலாவின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. இந்த தருணத்தில் நேபாளத்தின் துக்கத்தில் பங்கேற்கும் வகையில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழுவினர் நேபாளம் செல்கின்றனர் என்று வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறியுள்ளார்.
சுஷ்மா தலைமையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆனந்த் ஷர்மா, ஜனதா தளத் தலைவர் ஷரத் யாதவ், மார்க்சிஸ்ட் கட்சிப் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேபாளம் செல்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.