தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சென்ற கார் மீது மர்ம கும்பல் ஒன்று கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
5 நாள் பயணமாக பஞ்சாப் சென்றிருந்தார் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். லூதியானாவில் போகா கிராமத்தில் 2 தலித் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் பங்கேற்க பஞ்சாப் சென்றிருந்தார் கெஜ்ரிவால்.
அப்போது, திடீரென ஒரு கும்பல் கார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியது. அதில் கெஜ்ரிவால் காயமின்றி தப்பினார். ஆனால் அவரது கார் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. உடனே அந்த இடத்தில் கெஜ்ரிவாலுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இந்த தகவலை முதல்வர் கெஜ்ரிவால் டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.