இந்தியா

முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜாஸ் போர் விமானம் - இந்திய விமானப் படையில் சேர்ப்பு

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டு தேஜாஸ் விமானங்கள் இந்திய விமானப்படையில் இன்று முறைப்படி இணைக்கப்பட்டுள்ளது.

ANI

பெங்களூரு: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டு தேஜாஸ் விமானங்கள் இந்திய விமானப்படையில் இன்று முறைப்படி இணைக்கப்பட்டுள்ளது.

2003-ம் ஆண்டு முதல் எதிர்பார்க்கப்பட்டு முற்றிலும் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட இலகுரக போர் விமானமான தேஜாஸ் இன்று இந்திய விமானப்படையிடம் ஒப்படைத்தனர் இந்திய விஞ்ஞானிகள்.

சூப்பர்சோனிக் ஒற்றை இயந்திர விமானம், தேஜாஸ், ஆகிய 2 விமானங்களையும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் (HAL), ஏரோநாட்டிக்கல் டெவலப்மெண்ட் ஏஜென்சி (ADA)   இணைந்து வடிவமைத்துள்ளது. இந்திய முறைப்படி பூஜை செய்தும், தேங்காய் உடைத்தும் விழா நடத்தப்பட்டது.

இந்த விமானம் பாகிஸ்தான் மற்றும் சீனாவின் கூட்டு முயற்சியில் உருவான ஜெஎப் - 17 ரக போர் விமானத்தைவிட அதிகசக்தி வாய்ந்ததாகும்.

நடப்பு நிதியாண்டில் இதுபோன்ற 6 போர் விமானங்களையும், அடுத்த ஆண்டில் 8 விமானங்களையும் தயாரித்து வழங்க இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த தேஜாஸ் போர் விமானங்களை, அடுத்த ஆண்டுக்குள் படையில் சேர்க்க இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT