லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் லாரி வீட்டின் மேல் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 குழந்தைகள் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்துள்ளனர்.
லக்னோவில், இன்று காலை 5 மணியளவில் மணல் ஏற்றிக்கொண்டு வந்த லாரி வளைவில் திருப்பும் போது நிலைதடுமாறி அருகே உள்ள இரண்டு வீடுகளின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வீட்டின் வெளியே உறங்கி கொண்டிருந்த குழந்தைகள் மீது லாரி ஏறி இறங்கியது.
லாரியில் மணல் அதிகமாக இருந்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதில் குழந்தைகள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 4 பேர் காயமடைந்தனர்.
அங்குள்ள சாலைகளின் நிலைமை மிகவும் மோசமாக இருந்ததே இந்த விபத்திற்கு முக்கிய காரணம் என்று உயர் அதிகாரி சர்வேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.