போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் கல்லூரி பேராசிரியர் மீது ஆசிட் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று காலை 9 மணியளவில் கல்லூரிக்கு நடந்து வரும் போது பேராசிரியர் மீது, பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் பேராசிரியர் மீது ஆசிட் வீசி சென்றுள்ளனர்.
ஆசிட் வீச்சில் பேராசிரியரின் கை மற்றும் முகம் பலத்த சேதமடைந்த நிலையில் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மர்ம நபர்கள் குறித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.