ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள என்எச் 7 ஷம்ஷாபாத் விமான நிலைய சாலை அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர்.
என்எச் 7 ஷம்ஷாபாத் விமான நிலைய சாலையில் இன்று அதிகாலை லாரி மீது வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 6 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்து குறித்து அப்பகுதியில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.