இந்தியா

ரூ.100, ரூ.50 நோட்டுகளை வங்கியில் செலுத்திய வணிகர்!

உத்தரப் பிரதேச மாநிலம், மொராதாபாத் நகரில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) கிளையில், பொதுமக்களுக்குப் பயன்படும் என்பதால்

DIN

உத்தரப் பிரதேச மாநிலம், மொராதாபாத் நகரில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) கிளையில், பொதுமக்களுக்குப் பயன்படும் என்பதால் தனது கணக்கில் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான ரூ.100, ரூ.50, ரூ.10 நோட்டுகளை வணிகர் ஒருவர் செலுத்தி மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்த்துள்ளார்.
மொராதாபாத் நகரைச் சேர்ந்த வணிகர் அவ்தேஷ் குமார் குப்தா. இவர் புத்தி பிகார் பகுதியில் உள்ள எஸ்பிஐ கிளையில் வைத்துள்ள தனது கணக்கில் குறைந்த மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை வெள்ளிக்கிழமை செலுத்தினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
குறைந்த மதிப்புடைய ரூபாய் நோட்டுகளுக்குத் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வங்கி ஏடிஎம் மையங்கள் முன்பு முதியவர்கள் நிற்பதை பார்த்தபோது மிகுந்த வேதனை அடைந்தேன்.
எனவே, என்னிடம் இருந்த ரூ.1.5 லட்சம் மதிப்பிலான குறைந்த மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை எனது வங்கிக் கணக்கில் செலுத்தியிருக்கிறேன்.
இந்தப் பணம் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வருபவர்களுக்குப் பயன்படும். இதேபோல் மற்றவர்களும் தங்களிடம் உள்ள குறைந்த மதிப்புடைய பணத்தை தங்கள் வங்கிக் கணக்கில் செலுத்தி உதவலாம் என்றார் அவ்தேஷ் குமார் குப்தா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காத்மாண்டுவில் நேபாள - சீன ராணுவம் கூட்டுப் பயிற்சி!

கெங்கவல்லியில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள்!

பிஞ்சுக் கைவண்ணம்

ஆட்டுக் குட்டி

தெரியுமா?

SCROLL FOR NEXT