இந்தியா

உரி தாக்குதல்: பயங்கரவாதிகள் மின்சார வேலியை தாண்டியது எப்படி? திடுக்கிடும் தகவல்

உரி தாக்குதலில் ஈடுபட்ட 4 பயங்கரவாதிகளும், இந்திய எல்லைப் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் மின்சார வேலியை தாண்டியது குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

PTI


புது தில்லி: உரி தாக்குதலில் ஈடுபட்ட 4 பயங்கரவாதிகளும், இந்திய எல்லைப் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் மின்சார வேலியை தாண்டியது குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து நடந்து வரும் விசாரணையில், 4 பயங்கரவாதிகளில் ஒருவன், மின்சார வேலிகளின் இடுக்கில் நுழைந்து இந்திய எல்லைக்குள் வந்ததாகவும், பிறகு, அவர்கள் கொண்டு வந்த ஏணியைப் பயன்படுத்தி 3 பயங்கரவாதிகளும் மின்சார வேலியை தாண்டியிருப்பதும் தெரிய வந்துள்ளது.

வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை சுமந்து கொண்டு நான்கு பேருமே முள் வேலியின் இடுக்கில் நுழைவது என்பது கடினம் என்பதால், ஒருவன் மட்டுமே இடுக்கில் நுழைந்து, ஏணியை பயன்படுத்தி மற்றவர்கள் எல்லையை தாண்டியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சீனாவுக்கு 3 மாதம்; இந்தியாவுக்கு 3 வாரம்! அமெரிக்காவுக்கும் 50% வரிவிதிக்க காங்கிரஸ் கோரிக்கை!

உடை தாங்கும் இடை... அமைரா தஸ்தூர்!

சின்ன திரை வரலாற்றில் முதல்முறை.... திரிவேணி சங்கமமாகும் 3 தொடர்கள்!

வியத்நாம் டூ தூத்துக்குடி.! வின்ஃபாஸ்ட் கார்களில் என்னென்ன எதிர்பார்க்கலாம்?!

சூனியம் வைத்தாக ஒருவர் அடித்துக் கொலை: ஒடிசாவில் அடுத்தடுத்த சம்பவங்களால் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT