இந்தியா

கோயிலுக்கு இலவச தேக்கு மரங்கள்: புதிய சர்ச்சையில் கேரள முன்னாள் அமைச்சர் ஜெயராஜன்

DIN

அரசுப் பணி நியமன முறைகேட்டில் சிக்கி பதவியை ராஜிநாமா செய்த கேரள முன்னாள் அமைச்சர் ஜெயராஜன், தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
தனியாருக்குச் சொந்தமான கோயில் ஒன்றின் புனரமைப்புப் பணிகளுக்காக இலவசமாக தேக்கு மரங்களை வழங்குமாறு வனத் துறையிடம் அவர் கேட்டதாக தற்போது புகார் எழுந்துள்ளது. ஆனால், இதை மறுத்துள்ள ஜெயராஜன், தனது புகழுக்குக் களங்கம் கற்பிக்கவே இத்தகைய பொய்க் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
கேரளத்தில் தொழில்துறை அமைச்சராக இருந்தவர் இ.பி.ஜெயராஜன். இவர் தனது நெருங்கிய உறவினரான பி.கே. சுதீர் நம்பியாரை மாநிலத் தொழில்துறை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பணியமர்த்தினார். அதேபோல், தனது சகோதரரின் மருமகளான தீப்தி நிஷாந்தையும் வேறொரு பொதுத்துறை நிறுவனத்தில் பணி நியமனம் செய்தார். இது அந்த மாநில அரசியலில் கடும் விமர்சனங்களை எழுப்பியது.
இந்நிலையில், இந்த முறைகேடு தொடர்பாக ஆலோசிப்பதற்காக மாநில சட்டப்பேரவைக் குழுக் கூட்டம் கூடியபோது, பணி நியமனங்கள் தவறான முறையில் நடைபெற்றதாக ஜெயராஜன் ஒப்புக்கொண்டார். மேலும், அதற்குப் பொறுப்பேற்கும் வகையில் அமைச்சரவையிலிருந்து அவர் ராஜிநாமா செய்தார்.
இந்நிலையில், ஜெயராஜன் அமைச்சராக இருந்தபோது கண்ணனூரில் அமைந்துள்ள கோயில் ஒன்றின் புனரமைப்புப் பணிகளுக்குத் தேவையான தேக்கு மரங்களை இலவசமாக வழங்குமாறு வனத்துறை அமைச்சர் கே.ராஜுவிடம் கோரிக்கை விடுத்ததாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அந்தக் கோரிக்கை மனுவை கேரள முதன்மை தலைமை வனப் பாதுகாப்பாளரிடம் அமைச்சர் ராஜு அனுப்பியதாகவும், ஆனால், அவ்வாறு இலவசமாக தேக்கு மரங்களை வழங்க இயலாது என்று அவர் மறுத்துவிட்டதாகவும் தெரிகிறது.
இந்த விவகாரம் தற்போது வெளியாகியுள்ளதால், புதிய சர்ச்சைக்கு ஜெயராஜன் ஆளாகியிருக்கிறார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த அவர், கோயில் நிர்வாகம் சார்பில் வந்த கோரிக்கை மனுவையே வனத் துறை அமைச்சகத்திடம் தாம் அனுப்பியதாகவும், அதை ஊடகங்கள் வேண்டுமென்றெ தவறாக சித்திரிப்பதகாவும் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளை பறிகொடுத்தேன்” -பெற்றோர் குமுறல்

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

SCROLL FOR NEXT