இந்தியா

இந்தோ திபெத்திய எல்லைப் படையினருடன்  தீபாவளியைக் கொண்டாடுகிறார் பிரதமர்

DIN

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள இந்தியா-சீனா எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள இந்தோ திபெத்திய எல்லைப் போலீஸ் படையினருடன் பிரதமர் நரேந்திர மோடி தீபாவளி பண்டிகையைக் கொண்டாட உள்ளார்.
பிரதமராக பதவியேற்ற பிறகு, கடந்த 2 ஆண்டுகளும் தீபாவளி பண்டிகையை ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை மோடி வழக்கமாக வைத்திருக்கிறார்.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் தில்லியில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இமயமலையில் அமைந்துள்ள சியாச்சன் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுடன் கடந்த 2014-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை பிரதமர் மோடி கொண்டாடினார்.
இதேபோல், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட ராணுவ வீரர்களுடன் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை அவர் கொண்டாடினார்.
அதன்தொடர்ச்சியாக இந்த தீபாவளிப் பண்டிகையை சீன எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள இந்தோ திபெத்திய எல்லைப் போலீஸ் படை வீரர்களுடன் வரும் ஞாயிற்றுக்கிழமை அவர் கொண்டாட உள்ளார் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT